நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்துவதா? வாக்கு எண்ணிக்கை நடத்துவதா?- சென்னை உயர்நீதிமன்றம்

 

நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்துவதா? வாக்கு எண்ணிக்கை நடத்துவதா?- சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் எதிர் தரப்பினர் வரும் 24ஆம் தேதி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சட்ட போராட்டம் மூலம் என்ன சாதிக்க போகிறார்கள்? – நீதிபதிகள்

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. நடிகர் நாசர் தலைமையில் ‘பாண்டவர் அணி’யும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் ‘சுவாமி சங்கரதாஸ் அணியும்’ களமிறங்கியது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே தேர்தலை  ரத்து செய்ய கோரி  ஏழுமலை என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை தமிழக அரசு நியமித்தது. இதற்கு விஷால் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையைத் தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்துவதா? வாக்கு எண்ணிக்கை நடத்துவதா?- சென்னை உயர்நீதிமன்றம்

இந்நிலையில் விஷால் மேல்முறையீடு செய்த மனு மீதான மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் மற்றும், ஏழுமலை தரப்பும் செப்டம்பர் 24ஆம் தேதி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஆண்டு தேர்தலுக்கு ரூ.30 லட்சம் செலவிடப்பட்டுள்ளதால் மறுதேர்தல் சாத்தியமற்றது எனவும் கடந்த ஆண்டு தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண உத்தரவிட வேண்டும் என்றும் விஷால் தரப்பு தெரிவித்தது. தேர்தலை தனி நீதிபதி ரத்து செய்துள்ளதால் நியாயமான முறையில் மறுதேர்தல் நடத்த தயார் என ஏழுமலை தரப்பு வாதிட்டது. இந்நிலையில் நடிகர் சங்கத்துக்கு மறுத்தேர்தல் நடத்துவதா? அல்லது வாக்கு எண்ணிக்கை நடத்துவதா? என நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் எதிர் தரப்பினர் வரும் 24ஆம் தேதி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.