சென்னையில் கொரோனா பாதிப்பு 10,000ஐ நெருங்கிகிறது.. மண்டலவாரி பட்டியல் உள்ளே!

சென்னையில் கொரோனா பாதிப்பு 10,000ஐ நெருங்கிகிறது.. மண்டலவாரி பட்டியல் உள்ளே!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15,000ஐ எட்டியுள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,900ஐ எட்டியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு பெருமளவு உயர்ந்ததன் முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் பரவியது தான். இதனால் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம் அமல்படுத்த பட்டுள்ளது. அதன் மூலம், அதிகமாக கொரோனா பரவும் 33 பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கொரோனா பாதிப்பு 10,000ஐ நெருங்கிகிறது.. மண்டலவாரி பட்டியல் உள்ளே!

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மண்டலவாரியான விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 1889 பேரும் , தண்டையார்பேட்டையில் 974 பேரும் , திரு.வி.க நகரில் 1133 பேரும் , அண்ணா நகரில் 829 பேரும் , தேனாம்பேட்டையில் 1054 பேரும் , கோடம்பாக்கத்தில் 1391 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 9,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 4043 பேர் குணமடைந்து விட்டதாகவும், 5815 பேர் கண்காணிப்பும் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு 10,000ஐ நெருங்கிகிறது.. மண்டலவாரி பட்டியல் உள்ளே!