அடுத்த 2 நாட்களுக்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

அடுத்த 2 நாட்களுக்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

மதுரை, திருச்சி, கரூர், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் 40-42 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 11 மணி முதல் 3 மணி வரை வெயியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னையில் வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸ் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது