17 மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 

17 மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

17 மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், காரைக்கால் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் சென்னை, புதுச்சேரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் 26ம் தேதி வரை 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.