ஏசியன் பெயிண்ட்ஸ் லாபம் ரூ.574 கோடி… வருவாய் 91 சதவீதம் வளர்ச்சி

 

ஏசியன் பெயிண்ட்ஸ் லாபம் ரூ.574 கோடி… வருவாய் 91 சதவீதம் வளர்ச்சி

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.574.3 கோடி ஈட்டியுள்ளது.

அலங்கார வர்த்தக துறையை சேர்ந்த ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.574.3 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 2 மடங்குக்கு மேல் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.219.6 கோடி ஈட்டியிருந்தது.

ஏசியன் பெயிண்ட்ஸ் லாபம் ரூ.574 கோடி… வருவாய் 91 சதவீதம் வளர்ச்சி
ஏசியன் பெயிண்ட்ஸ்

2021 ஜூன் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,585.4 கோடியாக உள்ளது. இது 2020 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 91.1 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் வருவாயாக ரூ.2,922.7 கோடி ஈட்டியிருந்தது. 2021 ஜூன் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் வர்ததக வருவாய் 90.4 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏசியன் பெயிண்ட்ஸ் லாபம் ரூ.574 கோடி… வருவாய் 91 சதவீதம் வளர்ச்சி
ஏசியன் பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 6.04 சதவீதம் உயர்ந்து ரூ.3,159.20ஆக இருந்தது.