திரையுலகிற்குள் நுழையும் இயக்குநர் ஷங்கரின் மகள் ரஜினியிடம் ஆசி!
Sep 11, 2021, 20:06 IST1631371003000
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் இளையமகள் அதிதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசிப்பெற்றார்.
முத்தையா இயக்கத்தில் உருவாகும் விருமன் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. இந்தப் படத்தின் நாயகனாக கார்த்தி நடிக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 18 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்காக அதிதி தேனி செல்லவுள்ளார். அதிதி ஷங்கர் மகள் என அறிந்த திரைபிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
நிலையில் ரஜினியை இன்று நேரில் சந்தித்து ஆசி பெற்ற அதிதி ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில்”நேற்று விசேஷ நாளான விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தலைவர் ரஜினிகாந்த் சாரைச் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றேன்” என பதிவிட்டுள்ளார்.