‘நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து குரல் கொடுப்போம்’ நடிகர் விஷால் #JusticeForJeyarajAndFenix

 

‘நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து குரல் கொடுப்போம்’ நடிகர் விஷால் #JusticeForJeyarajAndFenix

சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் தமது கருத்தை ஆவேசமாகப் பதிவுசெய்துள்ளார்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களுள் ஒன்றான தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளத்தில் கடை வைத்திருப்பவர் ஜெயராஜ். இவரின் மகன் பென்னிக்ஸ். ஜூன் மாதம் 19-ம் தேதி ஊரடங்கு நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றனவா என்று பார்க்கச் சென்றனர் காவல் துறையினர். ஜெயராஜின் கடை திறந்திருந்தது. அதுவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விடச் சில நிமிடங்களே ஆகியிருந்தது.

‘நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து குரல் கொடுப்போம்’ நடிகர் விஷால் #JusticeForJeyarajAndFenix

இதனை அடுத்து, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்போது உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடுகிறது. இதனால் சிகிச்சைக்குச் சென்றாலும் அது பலன் அளிக்காமல் இருவரும் இறந்துவிடுகின்றனர். இருவரின் மரணத்துக்குக் காவல்துறையே காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் பல குற்றசாட்டுகளைக் காவல் துறை மீது வைத்து வருகிறது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தின் தாக்கம் தமிழகம் தாண்டி இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இம்மரணத்திற்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்து நடிகர் விஷால் ததது ட்விட்டர் பக்கத்தில், ‘பொதுமக்களுக்கு, சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸூகு நடந்த கொடூரத்தில் அநீதி இழைக்கப்பட்டது ஏன் என்று அறிந்துகொள்ளும் உரிமை நிச்சயம் உண்டு. மேலும் இதில் குற்றம் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படும் வரை இந்தச் சம்பவத்தை நாம் மறந்துவிடக் கூடாது. இடமாற்ற்ம் என்பது தண்டனை அல்ல. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.