அம்மன் அருளை பூரணமாய் பெற ஆடிக்கூழ் வார்த்தல் வழிபாடு!

 

அம்மன் அருளை பூரணமாய் பெற ஆடிக்கூழ் வார்த்தல் வழிபாடு!

ஆடிமாத அம்மன் வழிபாட்டில் முக்கியமான ஒன்று கூழ் வார்த்தல். ஆடி ஞாயிற்று கிழைகளில் பெரும்பாலும் இந்த கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். ஆடி மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறு கிழமையும் கூழ் வார்த்தல் நடைபெறுகிறது. அம்மன் கோயிலில் தான் என்றில்லாமல் வீடுகளிலேயே கூழ் வார்த்தல் வழிபாட்டை பெண்கள் செய்கின்றனர்.

அம்மன் அருளை பூரணமாய் பெற ஆடிக்கூழ் வார்த்தல் வழிபாடு!

ஆடி கூழ் பிரசாதம் என்பது உற்றார் உறவினர்கள் தெரிந்தவர் அறிந்தவர்களுக்கு மட்டுமின்றி, உள்ளே அம்மனுக்கு படையிலிட்டு வழிபாடு செய்த பின் அண்டா கூழையும் வாசலுக்கு கொண்டு வந்து வைத்து போவோர் வருவோர் எல்லோருக்கும் வழங்குவது கூழ் வார்த்தலின் இன்னொரு சிறப்பு. கிராமங்களில் மட்டுமின்றி நகர்ப்புறங்களிலும் கூட கூழ் வார்த்தல் நிகழ்ச்சி காலங்காலமாக கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.

“கந்தையானாலும் கசக்கிக் கட்டு.. கூழானாலும் குளித்துக் குடி” என்ற பழமொழி போலவே “ஆடிக்கூழ் தேடிக்குடி” என்ற பழமொழியும் காலங்காலமாக தமிழர்களிடம் புழங்கத்தில் இருந்து வரும் ஒன்று. இது கூழுக்கும் நமக்கும் உள்ள உறவை விளக்கும் விதமாகவே அமைந்தது.

அம்மன் அருளை பூரணமாய் பெற ஆடிக்கூழ் வார்த்தல் வழிபாடு!

கூழ் நமது பாரம்பரிய உணவு மட்டுமல்ல, நம் உடல் நலனை பாதுகாக்கும் உணவாகவும் இருக்கிறது என்பது தான் உண்மை.

பருவ கால மாறுதல் ஆடி மாதத்தில் தான் தொடங்குகிறது கோடையும் அதன் வெப்பமும் முடிந்து மழைகாலமும அதன் குளிரும் தொடங்குவது ஆடியில் தான். இந்த சீதோஷ்ண தட்பவெட்ப மாறுதலை உடல் எதிர்கொள்ள ஏதுவாக சில பழக்கங்களை பழங்காலத்திலேயே நாளிலேயே வகுத்துள்ளனர். அதில் ஒன்றுதான் ஆடியில் அம்மன் வழிபாடாக கூழ் வார்த்தல்.

அம்மன் அருளை பூரணமாய் பெற ஆடிக்கூழ் வார்த்தல் வழிபாடு!

ஆடி மாத காற்றோடு நோய் கிருமிகள் பரவும் வாய்ப்புள்ளது என்பதால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சரியான தடுப்பு மருந்து வெங்காயமும், மோரும் கலந்த கேழ்வரகு கூழ் தான் என்று உணர்ந்த முன்னோர்கள் மக்களைக் கூழ் குடிக்க வைக்க, ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் வார்க்கும் வழக்கத்தை உருவாக்கினார்கள்.

பிரார்த்தனைக்கு பிரார்த்தனையும் ஆச்சு . பிரசாதத்திற்கு பிரசாதமும் ஆச்சு . உடலுக்கு ஆரோக்கியமும் ஆச்சு. இப்படி ஒரே கல்லில் முன்று மாங்காய் அடித்தனர் நம் முதாதையர்கள். இந்த வழக்கம் இன்றும் நம்மிடையே தொடர்கிறது. ஆதிநாளில் இப்படி ஒரு வழிபாட்டை வகுத்திருக்கா விட்டால் மிகப்பெரிய மருத்துவம் வாய்ந்த உணவை நாம் மறந்திருப்போம்.

அம்மன் அருளை பூரணமாய் பெற ஆடிக்கூழ் வார்த்தல் வழிபாடு!

குறிப்பாக ஆடியில் கூழ் ஊற்றுவதில் நல்லறம் சார்ந்த செயல் ஒன்றும் இருக்கிறது. விவாசாயிகள் கையிருப்பான தானியங்களின் சேமிப்பு ஆடியில் கரைந்து உணவுப் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். எனவே பசிப்பிணி போக்க ஆடி மாதத்தில் கோயிலில் வைத்துக் கூழ் ஊற்றினார்கள். ஆடியில் அம்மனுக்கு கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கினால், அம்மன் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என அறத்தை ஆன்மிகத்துடன் இணைத்து வைத்தனர்.

கேழ்வரகை உணவு ஆரோக்கியமத்திற்கு நல்லது அதிலும் கேழ்வரகை விட கேழ்வரகு கூழ் சாப்பிடுவது அதனுடைய சத்து மேலும் அதிகரிக்கிறது.

அம்மன் அருளை பூரணமாய் பெற ஆடிக்கூழ் வார்த்தல் வழிபாடு!

சிறுதானியங்கள் மறைக்கப்பட்டு மறக்கப்பட்ட விட்டது என்றாலும் அவற்றுள் மறக்கப்படாமல் உபயோகப்படுத்தப்பட்டு வந்த ஒரு சிறுதானியம் கேழ்வரகு. இது மிக நுண்ணியதாய் இருப்பதால் இதன் தோல் நீக்கப்படுவதோ பாலிஷ் செய்யப்படுவதோ இல்லை என்பதால் சத்துக்களில் இழப்பின்றி பயன்படுத்தப்படுகிறது. ஆர்கானிக்ஸ் தானியங்கள் பக்கம் விழிப்புணர்வால் சிறுதானிங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. அவற்றில் இன்றும் ராகி எனப்படும் கேழ்வரகு பயன்பாடு அதிகம்தான். அதிலும் ஆடியும் அம்மன் வழிபாடும் கேழ்வரகின் தேவையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. ஆடியில் அம்மனை தொழுவோம் . கூழ் வார்த்து அம்பிகை அருள் பெறுவோம்.

-மு.ரா.சுந்தரமூர்த்தி