திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசாவின் மனைவி காலமானார்!
May 29, 2021, 19:39 IST1622297341000
திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசாவின் மனைவி பரமேஸ்வரி, மார்பக புற்றுநோய் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்களின் உடல்நிலை பற்றி ரேலா மருத்துவமனை முதல்வர் மோகமத் ரேலாவிடம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கேட்டறிந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன் திமுக துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆ ராசா மற்றும் அவரது மனைவியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
கடந்த 6 மாதமாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உடல்நிலை மோசமானது. அவருக்கு அளிக்கப்பட்ட கீமோதெரபியை அவரது உடல் ஏற்றுக் கொள்ளாததால் நோய் தொற்று தீவிரமானது. இந்நிலையில் இன்று மாலை, அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்