பக்ரீத்தை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை

 

பக்ரீத்தை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை

பக்ரீத்தை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பக்ரீத்தை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பங்கு வர்த்தகம் நடைபெறாது. நாளை வழக்கம் போல் பங்குச் சந்தைகள் செயல்படும். ஆக, இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும்.

பக்ரீத்தை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை
கொரோனா வைரஸ்

இந்த வாரத்தின் முதல் 2 தினங்களும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சில நிறுவனங்களின் ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகள் எதிர்பார்ப்புகளை காட்டிலும் குறைவாக இருந்தது, ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தலை தூக்க தொடங்கியது, மீண்டும் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படும் என்ற அச்சம், ஆசிய மேம்பாட்டு வங்கி இந்த நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை குறைத்தது போன்றவை பங்குச் சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

பக்ரீத்தை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

கடந்த 2 தினங்களில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.46 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 941.55 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 291.30 புள்ளிகளும் குறைந்தது.