முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை – நீலகிரி ஆட்சியர் அதிரடி உத்தரவு

 

முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை – நீலகிரி ஆட்சியர் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நான்காவது கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். சுகாதார பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிந்தாலும் அதை அணிவதில் அசவுகரியங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் விதவிதமாக, வித்தியாசமான துணிகளில் முககவசங்கள் தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது. இருப்பினும் முகக்கவசம் மீதான நாட்டமும், சுகாதாரத்தின் மீதான அக்கறையும் மக்களுக்கு இன்னும் வரவில்லை.

முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை – நீலகிரி ஆட்சியர் அதிரடி உத்தரவு

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 78 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. பாதிப்பு 486 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நீலகிரி மாவட்டம் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம்  சிறை தண்டனை  விதிக்கப்படும் என்று நீலகிரி  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.