25 மாவட்டங்களில் வாடகை கார்கள் இயக்கத்துக்கு அனுமதி!

25 மாவட்டங்களில் வாடகை கார்கள் இயக்கத்துக்கு அனுமதி!

கொரோனா ஊரடங்கால், வாடகை கார், ஆட்டோ, வேன், சரக்கு வாகனங்களை பயன்படுத்த, கடந்த மார்ச், 25 ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்டது. இதனால் இந்த வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள், 50 நாட்களாக வருவாயை இழந்து சிரமப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல வரைமுறைகள் மற்றும் தளர்வுகளுடன் வருகிற மே 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆனால் கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு கூடுதலாக சில புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்

மேற்கண்ட 25 மாவட்டங்களிலும் நாளை( மே.18) முதல் வாடகை கார்களான ஓலா, உபர் கால் டாக்ஸிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டம், வெளி மாநிலம் செல்ல மட்டுமே பாஸ் தேவை என்றும், உள்ளூர்களுக்குள் சென்றுவர இ.பாஸ் தேவையில்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.