தமிழச்சி தங்கபாண்டியன் கணவர் மருத்துவமனையில் அனுமதி
Apr 15, 2021, 08:56 IST1618457199000

ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி சந்திரசேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் கணவர் சந்திரசேகர் ஐபிஎஸ்(வயது63). ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி சந்திரசேகர். இவரது தம்பி ராஜேந்திரன் ஐஏஎஸ், வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து, தலைமை செயலகத்தில் செயலாளர் அஸ்தஸ்தில் உள்ள பொறுப்பு வகித்தார்.
சந்திரசேகரின் நெருங்கிய உறவினர்தான் ரவி ஐபிஎஸ் அதிகாரி.
சந்திரசேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர், ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


