சென்னையிலிருந்து கிளம்பிய 2 லட்சம் பேர்… வெறிசோடிய தலைநகர்!

 

சென்னையிலிருந்து கிளம்பிய 2 லட்சம் பேர்… வெறிசோடிய தலைநகர்!

தமிழகத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கானது வரும் 24 ஆம் தேதி வரை நீடிக்கிறது. ஊரடங்கு காலத்தில் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மதியம் 12 மணிவரை இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையிலிருந்து கிளம்பிய 2 லட்சம் பேர்… வெறிசோடிய தலைநகர்!

அதே சமயம் அரசு, தனியார் பேருந்துகள் , வாடகை டாக்சி, ஆட்டோ போன்ற வாகனங்கள் மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கு இடையே செல்ல அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் முழு ஊரடங்கை கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.இதனால் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு ஏதுவாக கடந்த 24 மணிநேரத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னையிலிருந்து கிளம்பிய 2 லட்சம் பேர்… வெறிசோடிய தலைநகர்!

இந்நிலையில் முழு ஊரடங்கை யொட்டி சென்னையிலிருந்து இரண்டு நாளில் 4 ஆயிரத்து 575 அரசு பேருந்துகளில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 575 பேர் வெளியூருக்கு பயணம் செய்துள்ளனர்.சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்ட சிறப்பு அரசு பேருந்துகளில் மக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்தனர்.இந்த சூழலில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அவசர பணியாளர்களுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.