2 வயது சிறுத்தை உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை!

 

2 வயது சிறுத்தை உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை!

இருப்பினும் வன விலங்குகளால்  பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாமலிருக்க வனத்துறை நிர்வாகம் முடிந்த பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. 

கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சிமலையில் காட்டு யானைகள், சிறுத்தைகள், மான்கள், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வன விலங்குகள்  உணவு மற்றும் நீரை தேடி அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள  வீரபாண்டி, மாங்கரை, பெரியதடாகம், சின்னதடாகம், சோமையனூர் உள்ளிட்ட  கிராமங்களுக்கு அவ்வபோது வருவது வழக்கம். இருப்பினும் வன விலங்குகளால்  பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாமலிருக்க வனத்துறை நிர்வாகம் முடிந்த பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. 

t

இந்நிலையில் பெரியதடாகம் அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோயில் அடிவாரத்தையொட்டிய மலைப்பகுதியில்  சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த  அவர்கள் கால்நடை மருத்துவர்கள்  உதவியுடன் சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை செய்து  அந்த இடத்திலேயே அதை எரித்தனர். 

tt

இதை தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, இரண்டு சிறுத்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த 2 வயதான சிறுத்தை உயிரிழந்தது  தெரியவந்தது  குறிப்பிடத்தக்கது.