கொரோனா விதிமீறல்… கோடிக் கணக்கில் அபராதம் வசூலிப்பு!

 

கொரோனா விதிமீறல்… கோடிக் கணக்கில் அபராதம் வசூலிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பாதிப்பை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. விதிமுறைகளை பின்பற்றாதோருக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டிருந்தது. அதன் படி, மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.200, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னையில் நாளொன்றுக்கு ரூ.10 லட்சம் அபராதமாக வசூலிக்க இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கொரோனா விதிமீறல்… கோடிக் கணக்கில் அபராதம் வசூலிப்பு!

இந்த நிழலில், கடந்த 4 நாட்களில் சென்னையைத் தவிர பிற இடங்களில் ரூ.2.52 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தெற்கு மண்டலத்தில் ரூ.85.74 லட்சம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் விதிகளை மீறியதாக 1,30,531 வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு மட்டும் இதுவரை ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா விதிமீறல்… கோடிக் கணக்கில் அபராதம் வசூலிப்பு!

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் மக்கள் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சுற்றித் திரிந்தனர். கொரோனாவின் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டு ‘அபராதம்’ என்ற ஆயுதத்தை காவல்துறை கையிலெடுத்தது. மாஸ்க் அணியாமல் சென்றவர்களை மடக்கி பிடித்து அதிரடியாக அபராதம் வசூலித்தது. அச்சமயம் கோடிக் கணக்கில் அபராதம் வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.