12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அலகுத்தேர்வு

 

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அலகுத்தேர்வு

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.கொரோனாவால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதே சமயம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்தல் முடிந்ததும் மே 3 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் குறையாத நிலையில் 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் மட்டும் நடைபெற்றதுடன் பொதுத்தேர்வு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் பொதுத்தேர்வு நடத்துவது சந்தேகம் என்பதால் தேர்வுத்துறை அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அலகுத்தேர்வு

அதன்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் விடைகளை எழுதி, பெற்றோர் கையொப்பம் பெற்று, PDF வடிவில் அனுப்ப வேண்டும் எனவும் பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அலகுத்தேர்வு மதிப்பெண்களை கொண்டு தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.