மார்கழி மாத மகர ராசி பலன்கள்

மகர ராசிக்கு ஜோதிட அடிப்படையில் மார்கழி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.
மகர ராசிக்கு 12ல் சூரியனும், சனியும் 2, 3ல் செவ்வாயும் 10, 11ல் சுக்கிரனும் 11, 12ல் புதனும்11ல் குருவும் 7ல் ராகுவும் 1ல் கேதுவும் அமர்ந்துள்ளனர். மார்கழி மாதத்தில் செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது.

மகர ராசிக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்குப் புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் மறுக்கப்படும். மாணவர்களுக்குப் பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இந்த மாதம் இருக்கும்.
மகர லக்ன பலன்கள்: பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும்.
உத்திராடம் நட்சத்திரம் : சுபச் செலவுகள் அதிகரிக்கும்.
திருவோணம் நட்சத்திரம்: உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்..
அவிட்டம் நட்சத்திரம் : முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 27, 28

அதிர்ஷ்ட எண்கள் : 2,3,7
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் ,புதன், வெள்ளி
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
வழிபடவேண்டிய தெய்வம் : மகாலட்சுமி, முருகப்பெருமான்.
பரிகாரம் : வெள்ளியன்று அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றுவதும் பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு செய்வதும் மிக சிறந்த பரிகாரம் ஆகும்.சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.


