பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு..!

 

பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு..!

தமிழகத்தில் பருவ மழை கடந்த 17 ஆம் தேதி துவங்கியதால், தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பருவ மழை கடந்த 17 ஆம் தேதி துவங்கியதால், தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பும், புயல் பாதிப்பும் பல மக்களின் வாழக்கையை புரட்டிப் போட்டது. இத்தகைய இயற்கை சீற்றங்கள் மீண்டும் நிகழ்ந்தால் அதனை எதிர்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

Rain

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Edapadi

அதனால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும் என்றும்,  மழை கண்காணிப்புக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மழை நிலவரம், ஆணை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்பதால் உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் தென்மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.