சென்னையிலிருந்து இருந்து திருப்பதிக்கு புதிய ஏசி பேருந்து சேவை தொடக்கம்! பேருந்து கட்டணம் ரூ.205 மட்டுமே!!
Nov 12, 2019, 20:21 IST1573570300000

திருவள்ளூரிலிருந்து திருப்பதி மற்றும் நெல்லூருக்கு 11 புதிய குளிர்சாதனப் பேருந்து இயக்கத்தை அமைச்சர்கள் பென்ஜமின் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்துக்கு உட்பட்ட திருவள்ளூர் மண்டலத்துக்கு ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 11 புதிய ஏசி பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சென்னையிலிருந்து, திருவள்ளூர், திருத்தணி வழியாக 4 புதிய ஏசி பேருந்துகளும், காளஹஸ்தி வழியாக 2 பேருந்துகளும் திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன.

இத்துடன் சென்னையிலிருந்து நெல்லூருக்கு 5 புதிய ஏசி பேருந்து இயக்கமும் தொடங்கப்பட்டது. இந்த பேருந்துகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு 205 ரூபாய் கட்டணமும், நெல்லூருக்கு 245 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


