சித்திரை நட்சத்திரக்காரர்களின் குணாதிசயங்களும் வழிபாட்டு கோயில்களும்

 

சித்திரை நட்சத்திரக்காரர்களின் குணாதிசயங்களும் வழிபாட்டு கோயில்களும்

சித்திரை நட்சத்திரக்காரர்களின் குணாதிசயங்களும் அவர்கள் வழிபட வேண்டிய கோயில்களை பற்றியும் பார்போம்.

சித்திரை நட்சத்தின் முதல் இரண்டு பாதங்கள் புதனின் கன்னி ராசியிலும், மூன்று, நான்காம் பாதங்கள் சுக்கிரனின் துலா ராசியிலும் வருகின்றது. 7 நட்சத்திரங்களில் 14 வது நட்சத்திரமாக வருகின்ற நட்சத்திர கூட்டம் சித்திரை நட்சத்திரமாகும்.

chitha

ராசி மண்டலத்தின் 12 ராசிகளையும் சரி பாதியாக பிரிக்கும் நட்சத்திரம் இந்த சித்திரை நட்சத்திரம் ஆகும்.

சித்திரை நட்சத்திராதிபதி செவ்வாய், இதன் நட்சத்திர வடிவம் புலிக்கண் மற்றும் முத்து, இதன் அதி தேவதை தேவர்களின் தச்சனாகிய விஸ்வகர்மா, இதன் விருட்சம் வில்வ மரம் ஆகும்.

இந்த நட்சத்திரகாரர்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். அலங்காரமான ஆடை, அணிகலன்களை விரும்பி அணிவார்கள். 

muruga

சொன்ன சொல்லை நிறைவேற்றுவார்கள்.தைரியசாலியாகவும் தானதர்மம் செய்பவராகவும் இருப்பார்கள்.அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர்கலாகும் தாங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

உள்ளதை உள்ளபடி பேசுவார்களாகவும்.வலிய வரும் சண்டையை விடாமல் பதிலடி தருபவர்கலாகும் இருப்பார்கள். தாங்கள் சார்ந்திருக்கக் கூடிய துறையில் சாதிக்கக் கூடிய வல்லமையும் முதலிடத்தைப் பிடிக்கக்கூடிய ஒரு சக்தியும் மக்களால் போற்றி புகழக் கூடிய ஓர் அந்தஸ்தும் நாடாளும் யோகமும் இவர்களுக்குக் கிடைக்கும்.பாதி வாழ்க்கையை சுகபோகியாகவும் மீதி வாழக்கையை துறவறத்திலும் கழிப்பார்கள்.

chiththirai

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினமும் விஸ்வகர்மாவை வழிபட்டு வருவதன் மூலமும், செவ்வாய் கிழமையில் நவக்கிரகத்தில் இருக்கும் செவ்வாய் பகவானை சிவப்பு மலர்களால் அர்ச்சித்து வழிபடுவதன் மூலமும்,

வில்வ இலைகளால் சிவ பெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதன் மூலமும், முத்து, புலிக்கண், பந்து , வடிவங்களை அதிகமாக பயன்படுத்தி வருவதன் மூலம், சிவன் கோயில்களில் வில்வ மரக்கன்று நட்டு வளர்த்து வருதன் மூலமும், தங்கள் சுய பலத்தை பெருக்கிக்கொண்டு மேன்மை அடையலாம்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்வாதி நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் முருகன் கோயில் அல்லது பிள்ளையார் கோயிலுக்கு சென்று அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலமும், பெருமாள் கோயிலில் இருக்கும் கருடாழ்வாருக்கு இளநீர் அபிஷேகம் செய்து, சிவப்பு பட்டாடை அணிவித்து மல்லிகைப் பூமாலை சாற்றி நெய்தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலமும்

chiththirai

சித்திரை நட்சத்திரகாரர்கள் மேன்மையான பலன்களை பெறலாம். மேலும் சித்திரை நட்சத்திரகாரர்கள் குருவித்துறையில் அமைந்துள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது அவர்களது பூர்வ ஜென்ம பாவங்களில் இருந்து விடுபடலாம்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களில் நல்ல காரியங்களைத் தொடங்கலாம்.