அதிகரித்து வரும் கடத்தல் தங்கங்கள்! அதிகாரிகளும் உடந்தையா?

அதிகரித்து வரும் கடத்தல் தங்கங்கள்! அதிகாரிகளும் உடந்தையா?

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ஏறிக் கொண்டே போகிறது. ரூ30ஆயிரத்தை நெருங்குகிறது என்றர்கள். அதையும் தாண்டி சென்று கல்யாணக் கனவு காண்பவர்களின் வாழ்க்கையில் கலவரத்தை ஏற்படுத்தி வருகிறது தங்கத்தின் விலையுயர்வு. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் ஷார்ஜா மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.77கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை திருச்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது, கடத்தல் தங்கம் அதிகளவில் பிடிக்கப்படுகின்றதா… அல்லது தங்கம் அதிகமாக கடத்தப்படுகின்றதா என்கிற கேள்வியை மக்கள் மனதில் எழுப்பியுள்ளது. 

gold

சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரம் சுந்தரபாண்டியன் பட்டினத்தைச் சேர்ந்த அன்வர் கான் (29), திருச்சியை சேர்ந்த 35 வயதான செய்யது அபுதாகிர் ஆகியோர் தங்கள் ஆசனவாய் மற்றும் பேண்ட் பாக்கெட்டில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் கடத்தி வரப்பட்ட தங்கம்  கட்டிகளாகவும், செயின் வடிவிலும் 45.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1.18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அன்வர் கானிடம் மட்டும் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. 

இது போல நேற்று காலை துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் முகமது ஆரிப், நாகூர் மீரான், முகமது உசேன், சர்புதீன் ஆகிய பயணிகளிடம் இருந்து 1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் 4 பேரையும் கைது செய்தனர். 

gold

திருச்சியில் இந்த சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது என்றால், கடந்த 2ஆம் தேதி ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமான பயணிகள் இருவரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் பற்பசை பேஸ்ட், ஜீன்ஸ் பேண்ட், ஆசனவாய் உள்ளிட்ட பகுதிகளில் 1.81 கிலோ எடைகொண்ட தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.  அண்மைக்காலங்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிற நிலையில், தங்க கடத்தலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வளைகுடா நாடுகள், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது!