புழல் ஏரியில் இருந்து மீண்டும் நீர் திறப்பு!

 

புழல் ஏரியில் இருந்து மீண்டும் நீர் திறப்பு!

புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால், மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த கனமழையால், சாலைகளில் நீர் தேங்கி சென்னை மீண்டும் வெள்ளக்காடாக மாறியது. இயந்திரங்களை கொண்டு மழை நீரை வெளியேற்றும் அளவிற்கு நிலைமை மீண்டும் மோசமாகிவிட்டது.

புழல் ஏரியில் இருந்து மீண்டும் நீர் திறப்பு!

இந்த சூழலில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தொடர் மழையால் இதுவரை 4,266 ஏரிகள் நிரம்பியிருக்கும் நிலையில், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியில் இருந்து தற்போது 177 கன அடி நீர் திறக்கப்படுகிறது. புழல் ஏரிக்கான நீர்வரத்து 312 கன அடியாக உள்ள நிலையில், ஓரளவு மழைப் பொழிவு குறைந்ததால் உபரி நீர் திறப்பு நேற்று பிற்பகல் 12 மணிக்கு நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.