பிளஸ் 2 தேர்வு எழுதாத 34 ஆயிரம் மாணவர்களுக்கு மறு தேர்வு… இன்று அறிவிப்பு வெளியாகும் என்று செங்கோட்டையன் பேட்டி

 

பிளஸ் 2 தேர்வு எழுதாத 34 ஆயிரம் மாணவர்களுக்கு மறு தேர்வு… இன்று அறிவிப்பு வெளியாகும் என்று செங்கோட்டையன் பேட்டி

பிளஸ் 2 கடைசி தேர்வை எழுதாத 34 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவடையும் சமயத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதற்குள்ளாக கொரோனாத் தொற்று பீதி அதிகமானதால் கடைசித் தேர்வை 34,482 பேர் எழுதவில்லை. எனவே, இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

பிளஸ் 2 தேர்வு எழுதாத 34 ஆயிரம் மாணவர்களுக்கு மறு தேர்வு… இன்று அறிவிப்பு வெளியாகும் என்று செங்கோட்டையன் பேட்டிஆனால், இவர்களுக்கு மீண்டும் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்க தயாராக உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், கொரோனா பீதி இன்றும் அகலாத நிலையில் இவர்களுக்கு தேர்வு நடத்த முடியவில்லை. தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள சூழலில் 34 ஆயிரம் பேரில் 718 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிட முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.

பிளஸ் 2 தேர்வு எழுதாத 34 ஆயிரம் மாணவர்களுக்கு மறு தேர்வு… இன்று அறிவிப்பு வெளியாகும் என்று செங்கோட்டையன் பேட்டிஜூலை 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில் தேர்வு எழுத தவறிய 34 ஆயிரம் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த தமிழக அரசு தயாராகி வருகிறது. இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “கொரோனா அச்சம் காரணமாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத 34 ஆயிரம் மாணவர்களின் வசதிக்காக மீண்டும் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு நடைபெறும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும். தற்போது 34 ஆயிரம் பேரில் 718 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் 34 ஆயிரம் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். தேர்வு முடிந்த நான்கு நாட்களில் பிளஸ் 2 முடிவுகள் வெளியிடப்படும்” என்றார்.