‘கொரோனா நெகட்டிவ்’ என வந்தாலும் அறிகுறி இருந்தால் மீண்டும் பரிசோதனை செய்ய உத்தரவு!

‘கொரோனா நெகட்டிவ்’ என வந்தாலும் அறிகுறி இருந்தால் மீண்டும் பரிசோதனை செய்ய உத்தரவு!

கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தாலும் அறிகுறி இருந்தால் மறுபடியும் பரிசோதனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்குதல் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பாதிப்பு அதிகரிப்பதால் உலகளவிலான கொரோனா தாக்குதலில் இந்தியா 2ஆவது இடத்தில் இருக்கிறது. இதில் ஆறுதல் அளிக்கும் செய்தி என்னவென்றால், குணமடைபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா 2ஆவது இடத்தில் இருக்கிறது.

‘கொரோனா நெகட்டிவ்’ என வந்தாலும் அறிகுறி இருந்தால் மீண்டும் பரிசோதனை செய்ய உத்தரவு!

இந்த நிலையில் கொரோனா நெகட்டிவ் என வந்தவர்களுக்கு அறிகுறி இருந்தாலும் மறுபரிசோதனை செய்ய வேண்டும் என எல்லா மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சிலருக்கு ரேபிட் கிட் பரிசோதனையில் கொரோனா இல்லை என வந்தாலும் அறிகுறி இருப்பதாகவும், அவர்களுக்கு பாசிட்டிவ் ஆக இருந்தால் அதனை தவறவிடக்கூடாது என்பதை உறுதி படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் முதல் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்து அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து மறுபரிசோதனை செய்து தனிமைபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

‘கொரோனா நெகட்டிவ்’ என வந்தாலும் அறிகுறி இருந்தால் மீண்டும் பரிசோதனை செய்ய உத்தரவு!

மேலும், இதற்காக எல்லா மாவட்டத்திலும் ஒரு அதிகாரி அல்லது ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என்றும் ரேபிட் சோதனை விவரங்களை பகுப்பாய்வு செய்து கொரோனா நெகட்டிவ் என்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.