குடும்பத்தை காப்பாற்ற காய்கறி விற்கும் வில்வித்தை வீராங்கனை ! உலக அளவில் திறமையை வெளிப்படுத்த உதவுமா ஜார்கண்ட் அரசாங்கம்?

குடும்பத்தை காப்பாற்ற காய்கறி விற்கும் வில்வித்தை வீராங்கனை ! உலக அளவில் திறமையை வெளிப்படுத்த உதவுமா ஜார்கண்ட் அரசாங்கம்?

தேசிய அளவிலான வில்வித்தை வீராங்கனை உலக அளவில் நடைபெற உள்ள பயிற்சிக்கு தயாராக முடியாமல் ஊரடங்கு காலத்தில் கஷ்டப்படும் தனது குடும்பத்திற்காக காய்கறிகளை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவருக்கு ஜார்கண்ட் அரசாங்கம் உதவ வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் அவருக்கு முதலமைச்சர் உதவிக் கரம் நீட்டியுள்ளார்.

குடும்பத்தை காப்பாற்ற காய்கறி விற்கும் வில்வித்தை வீராங்கனை ! உலக அளவில் திறமையை வெளிப்படுத்த உதவுமா ஜார்கண்ட் அரசாங்கம்?
கடந்த செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் கவனத்திற்கு இந்த விஷயம் செல்ல முதற்கட்டமாக அவருக்கு ரூ.20,000 நிதி உதவி வழங்கப்பட்டது. ஆனாலும் இதுகுறித்து சோனு கூறுகையில் இந்தப் பணம் தன்னுடைய குடும்பத்திற்கும் தான் மேலும் பயிற்சி பெற வில் வாங்குவதற்கும் போதாது என கூறியுள்ளார். எவ்வளவு பணம் மிச்சம் செய்தும் வில் வாங்க முடியவில்லை என்றும் ஊரடங்கு காலத்தில் குடும்பத்தை சமாளிப்பதற்காக காய்கறி விற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தை காப்பாற்ற காய்கறி விற்கும் வில்வித்தை வீராங்கனை ! உலக அளவில் திறமையை வெளிப்படுத்த உதவுமா ஜார்கண்ட் அரசாங்கம்?
இது குறித்து சோனு கூறுகையில், “நான் சொந்தமாக குறைந்த விலையில் கிட் வாங்குவதன் மூலம் எனது பயிற்சியைத் தொடர்ந்தேன், ஆனால் அது ஒரு வருடத்திற்கு முன்பு உடைந்துவிட்டது. அதனால் என்னுடைய பயிற்சியை நிறுத்த வேண்டி இருந்தது. என்று சோனு கூறினார். சோனு ஒரு வீட்டில் செய்யத் தொடங்கினார். தற்போது ஊரடங்கு காரணமாக அந்த வேலையும் இன்றி காய்கறிகளை விற்பனை செய்கிறார். தொடர்ந்து பயிற்சி பெற யாரிடமும் பிச்சை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளாமல் ஒரு ஏற்பாட்டைச் செய்யுமாறு மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். என கூறினார். முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது டிவிட்டில் “திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், அவர்கள் அனைத்து வசதிகள் மற்றும் வாய்ப்புகளுடன் இணைந்திருப்பதை உறுதி செய்வதற்கும் மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” என்று கூறியுள்ளார்.