மேலும் ஒரு ஆர்சிபி வீரருக்கு கொரோனா… “எப்படி கப் அடிக்கிறது” – புலம்பும் கோலி!

 

மேலும் ஒரு ஆர்சிபி வீரருக்கு கொரோனா… “எப்படி கப் அடிக்கிறது” – புலம்பும் கோலி!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் டேனியல் சாம்ஸுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாமல் இருப்பதால் தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முன்னதாக ஏப்ரல் 3ஆம் தேதி அவரைப் பரிசோதித்ததில் நெகட்டிவ் என்று வந்துள்ளது.

மேலும் ஒரு ஆர்சிபி வீரருக்கு கொரோனா… “எப்படி கப் அடிக்கிறது” – புலம்பும் கோலி!

இன்றைய பரிசோதனையில் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஆர்சிபி அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் சாம்ஸ் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டு ஏலத்தில் பெங்களூரு அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. அடுத்த நாளில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பையில் மோதுகின்றன. இச்சூழலில் வீரர்களுக்கும் அணி நிர்வாகிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஒரு ஆர்சிபி வீரருக்கு கொரோனா… “எப்படி கப் அடிக்கிறது” – புலம்பும் கோலி!

பரிசோதனையில் கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணாவுக்கும் டெல்லி அணியின் முக்கிய வீரர் அக்சர் படேலுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. அதேபோல சென்னை அணி நிர்வாகிக்கும் வான்கடே மைதான ஊழியர்கள் 12 பேருக்கும் நேற்று தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் பெங்களூரு அணியின் இளம் வீரரான தேவ்தத் படிக்கல்லுக்கு கொரோனா இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இளம் வீரராக இருந்தாலும் அணியில் முக்கியமான இடமான தொடக்க வீரராகக் களமிறங்குபவர்.