’வாஷிங்டன் சுந்தரை விட்டுக்கொடுக்க மாட்டோம்’ RCB முடிவு

 

’வாஷிங்டன் சுந்தரை விட்டுக்கொடுக்க மாட்டோம்’ RCB முடிவு

ஐபிஎல் 2020 சீசன் பரபரப்போடு நடந்து முடிந்தது. எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே மும்பை கோப்பையை வென்றது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் சுற்று முடிந்ததும் வெளியேற்றப்பட்டது. அதற்கு காரணம், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் இல்லாதது என்று கூறப்பட்டது.

இந்த வருட ஐபிஎல் சீசனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல மாறுதல்கள் நடக்க உள்ளன. சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி, டூபிளெஸ்சிஸ், இளம் வீரர் சாம் கரண் ஆகியோரும் சி.எஸ்.கேவில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். சென்ற சீசனில் சொதப்பிய கேதார் ஜாதவ்வுடன், பியூஷ் சாவ்லா, முரளி விஜய் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹர்பஜன் சிங்கோடு ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதால் அவரும் விலகிக்கொள்கிறார்.

’வாஷிங்டன் சுந்தரை விட்டுக்கொடுக்க மாட்டோம்’ RCB முடிவு

எந்த வருடமும் இல்லாத திருநாளாய் சென்ற சீசனில் அசத்திய பெங்களுர் டீமில் அப்படியே தக்க வைத்ததுபோல இருக்கிறது. ஆஸ்திரேலியா டூரில் கலக்கிய தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரை விட்டுக்கொடுக்க மாட்டோம் என அணியில் தக்க வைத்துக்கொண்டுள்ளது பெங்களூர் டீம்.

’வாஷிங்டன் சுந்தரை விட்டுக்கொடுக்க மாட்டோம்’ RCB முடிவு

இந்த ஆண்டும் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களுர் டீம்க்கு விராட் கோலிதான் கேப்டன். அவரோடு டி வில்லியர்கஸ், சஹல், தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர், முகம்மது சிராஜ், சைனி, ஆடம் ஸாம்பா, ஷஹப்ஸ் அஹம்மது, ஜோஷ் பிலிப், கேன் ரிச்சர்ட்ஸன், பவுன் டேஸ்பாண்டே ஆகியோரை பெங்களூர் டீம் தக்க வைத்துள்ளது.

மிக விரைவில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளதால் பெரிய அளவில் மாற்றங்கள் நடைபெற வில்லை.