கொரோனா பரவல் காரணமாக ரூ.50 ஆயிரம் கோடி சலுகையை அறிவித்த ரிசர்வ் வங்கி!

 

கொரோனா பரவல் காரணமாக ரூ.50 ஆயிரம் கோடி சலுகையை அறிவித்த ரிசர்வ் வங்கி!

கொரோனா இரண்டாம் அலை பரவல் உக்கிரமாக உள்ளது. தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர். ஆனால் அந்தத் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்கள் கொரோனா வைரஸின் சங்கிலித் தொடரை உடைக்க தற்காலிக தீர்வான முழு ஊரடங்கை நோக்கி நகர்ந்திருக்கின்றன. டெல்லி, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக ரூ.50 ஆயிரம் கோடி சலுகையை அறிவித்த ரிசர்வ் வங்கி!
கொரோனா பரவல் காரணமாக ரூ.50 ஆயிரம் கோடி சலுகையை அறிவித்த ரிசர்வ் வங்கி!

கொரோனா பரவலின் முதல் அலையின்போதே முழு ஊரடங்கு போடப்பட்டதால் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. மக்களிடையே பணப்புழக்கம் மிகவும் குறைந்தது. ஏற்கெனவே சேமித்து வைத்த பணத்தையே செலவளித்தனர். தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரளவு பொருளாதாரத்தை ஈட்டினார்கள். தற்போது மீண்டும் ஒரு ஊரடங்கு என்பது மக்களின் அடிமடியிலேயே கைவைக்கும் வகையில் பேராபத்தை விளைவிக்கும். மக்களிடம் பணப்புழக்கம் இல்லாவிட்டால் தன்னிச்சையாகவே பொருளாதாரமும் சரிவை நோக்கிச் சென்றுவிடும்.

இத்தகைய பரபரப்பான சூழலில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை ஆளுநர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை அதிதீவிரமாக இருக்கிறத. பொருளாதார நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவு இப்போதைக்கு ஏற்படவில்லை. ஏனெனில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இல்லை. பெரும்பாலான மாநிலங்களில் தளர்வுகள் இருப்பதால் பொருளாதார நடவடிக்கைகள் சீராக சென்று கொண்டிருக்கின்றன.

கொரோனா பரவல் காரணமாக ரூ.50 ஆயிரம் கோடி சலுகையை அறிவித்த ரிசர்வ் வங்கி!

இருப்பினும், சுகாதார அவசர நிலையைக் கருதி மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் 50 ஆயிரம் கோடி ரூபாய் சலுகை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் சுகாதார உட்கமைப்புகளை அதிகரிக்க வழிவகை செய்யப்படும். மேலும் வங்கிகளுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனளிக்கப்படும். சிறிய வங்கிகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை வங்கிகள் கடன் வழங்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் வங்கிகள் விரைவாக கடன் அளிக்கும் வகையில் செயல்படும்” என்றார்.