ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி

 

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கின் போது குறைவாக இருந்த கொரோனா பரவல் தற்போது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த கொரோனா வைரஸால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி

இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர், தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இன்று எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறியும் இருக்கிறது. நன்றாக இருக்கிறேன், சமீபத்தில் தன்னுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். தனிமையில் இருந்து தொடர்ந்து பணியாற்றுவோம். ரிசர்வ் வங்கியில் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். நான் அனைத்து மருத்துவர்களுடனும் தொடர்பில் இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.