ஹெச்டிஎப்சி வங்கிக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை – வாடிக்கையாளர்கள் கலக்கம்!

 

ஹெச்டிஎப்சி வங்கிக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை – வாடிக்கையாளர்கள் கலக்கம்!

முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியில் பலரும் நம்பிக்கையோடு வங்கிக் கணக்குகளை வைத்துள்ளனர். அந்த வங்கிக்கு தற்போது ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளில், அந்த வங்கி புதிதாக மின்னணு சேவைகளை அளிக்க முடியாது. அதாவது, புதிய மின்னணு வங்கிச் சேவைகளை தொடங்குவது, கிரெடிட் கார்டு வழங்குவது தடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த வங்கியின் மின்னணு சேவைகளில், ஏற்பட்ட பல தடங்கல்கள் காரணமாக இந்த தடையை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. இது தொடர்பான விவரங்களை, அந்த வங்கி பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்புக்கு அனுப்பி உள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கிக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை – வாடிக்கையாளர்கள் கலக்கம்!


ஹெச்டிஎப்சி வங்கிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில், அந்த வங்கி புதிய மின்னணு சேவைகள் மூலம் வர்த்தகம் ஈட்டும் நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 21 ஆம் தேதி அந்த வங்கியின் மின்னணு சேவைகள் அனைத்தும் திடீரென முடங்கியது. சுமார் 12 மணி நேரத்துக்குபின், அந்த கோளாறு சரிசெய்யப்பட்டாலும், அதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதி அடைந்தனர். இதுபோன்ற சிக்கல்கள் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்யும்பட்சத்தில் எப்போது வேண்டுமானாலும், மின்னணு வர்த்தகத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கிக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை – வாடிக்கையாளர்கள் கலக்கம்!


இது தொடர்பாக ஹெச்டிஎப்சி வங்கி வெளியிட்டுள்ள செய்தியில், ரிசர்வ் வங்கியின் தடை காரணமாக , தற்போதைய வங்கிச் சேவைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே உள்ள கிரெடிட் கார்டு மற்றும் இதர மின்னணு சேவைகளை பயன்படுத்துவதில் தடை இல்லை என்பதால், ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் பயப்பட்த் தேவையில்லை என கூறியுள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கிக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை – வாடிக்கையாளர்கள் கலக்கம்!


அந்த வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ஷஷி ஜெகதீசன் கூறுகையில், எங்களது வாடிக்கையாளர்கள் உயர்ந்தபட்ச தரம் மற்றும் சேவைகளை எதிர்பார்க்கிறார்கள், சில நேரங்களில் அந்த எதிர்பார்ப்புகளை எட்டுவதில் சிரமம் ஏற்பட்டு விடுகிறது. அதற்காக வாடிக்கையாளர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை காரணமாக ஹெச்டிஎப்டி வங்கி புதிய கிரெடிட் கார்டுகளை அளிக்க முடியாது. இதனால் சக போட்டி வங்கிகளுக்கு புதிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. எனினும், ஹெச்டிஎப்சி வங்கி தங்கள் கோளாறுகளை சரி செய்து, விரைவில் தடையை நீக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.