யார் ஆட்சிக்கு வந்தாலும் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடிதான் பறக்கும்! எல்.முருகனுக்கு சவால் விட்ட அதிமுக அமைச்சர்!

 

யார் ஆட்சிக்கு வந்தாலும் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடிதான் பறக்கும்! எல்.முருகனுக்கு சவால் விட்ட அதிமுக அமைச்சர்!

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயகுமார், வெற்றிகரமாக பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு உள்ளது. கடலூரில் நீரந்தர புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. பள்ளி கல்லூரிகளை நிவாரண முகாம்களாக மாற்றி உள்ளோம். கோவிட் காலம் என்பதால் நிவாரண முகாம்களில் சமூக இடைவெளி, கழிவறை உள்ளிட்ட வசதிகளை கூடுதலாக ஏற்படுத்தி உள்ளோம். வடகிழக்கு பருவமழை மூலம் 60 சதவீதம் குடிநீர் மற்றும் விவசாய தேவை பூர்த்தியடையும். உயிர், உடைமை கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பணிகள், நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன.

யார் ஆட்சிக்கு வந்தாலும் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடிதான் பறக்கும்! எல்.முருகனுக்கு சவால் விட்ட அதிமுக அமைச்சர்!

நவீன கால விவசாயத்திற்கு ஏற்றது இந்த வேளாண் மசோதா என முதல்வரும் பிரதமரும் துறை சார்ந்த அமைச்சரும் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் எல்லா மசோதாக்களையும் எதிர்ப்பது போல விவசாய மசோதாக்களை எதிர்க்கின்றனர். அவர்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது என்று தெரியவில்லை. எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும். அந்தந்த கட்சித்தலைவர்களுக்கு அவரவர் கொடிகளை தூக்கிப்பிடிக்க உரிமை உள்ளது. கட்சிக்கொடியை தூக்கிப்பிடிக்க தான் அவரை தலைவராக நியமித்துள்ளனர்” எனக் கூறினார்.