தனக்கென கூட்டத்தை சேர்க்கும் ஓபிஎஸ்… வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாருடன் ஓபிஎஸ் சந்திப்பு

 

தனக்கென கூட்டத்தை சேர்க்கும் ஓபிஎஸ்… வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாருடன் ஓபிஎஸ் சந்திப்பு

முதல்வர் வேட்பாளர் யார் என்கிற குழப்பம் தீர்க்கப்படாமல், தேர்தல் பணிகளில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது என்கிற இக்கட்டான சூழலில் அதிமுக சிக்கி கொண்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்புக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றாலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை. அக்டோபர் 7 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சற்று முன் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார்.

தனக்கென கூட்டத்தை சேர்க்கும் ஓபிஎஸ்… வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாருடன் ஓபிஎஸ் சந்திப்பு

இதனிடையே இன்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தற்போது வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார்.