”4கே திரையுடன் கூடிய ரேசர் புக் 13 கேமிங் லேப்டாப் அறிமுகம்”

 

”4கே திரையுடன் கூடிய ரேசர் புக் 13 கேமிங் லேப்டாப் அறிமுகம்”

ரேசர் புக் 13 என்ற புதிய பிரீமியம் கேமிங் லேப்டாப்பை ரேசர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த கேமிங் லேப்டாப் பல பிரிமீயம் வசதிகளையும் சிறப்பம்சங்களையும் உள்ளடக்கியது. குறிப்பாக, விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளம், 4கே ரெசல்யூசன் கொண்ட 13 இன்ச் திரை, இன்டெல் கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7 என்ற 1165ஜி7 பிராசர், ஆர்ஜிபி கீபோர்ட், 65 வாட்ஸ் பவர் அடாப்டர், புளூடூத் 5.1, எச்டிஎம்ஐ போர்ட், மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், யுஎஸ்பி 3.1 டைப் ஏ போர்ட், தண்டர்போல்ட் 4 போர்ட் மற்றும் ஒரு 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் ஆகியவற்றை கொண்டது.

”4கே திரையுடன் கூடிய ரேசர் புக் 13 கேமிங் லேப்டாப் அறிமுகம்”

இதில் கோர்ஐ5 பிராசசர், 8ஜிபி ரேம் + 256 ஜிபி மாடல் லேப்டாப், இந்திய மதிப்பில் 89 ஆயிரம் ரூபாய்க்கும், கோர் ஐ7 பிராசசர் + 16ஜிபி ரேம் + 256 ஜிபி மாடல் லேப்டாப், இந்திய மதிப்பில் 1.18 லட்ச ரூபாய்க்கும், கோர் ஐ7 பிராசசர் + 16ஜிபி ரேம் + 512 ஜிபி மாடல் லேப்டாப், இந்திய மதிப்பில் 1.48 லட்ச ரூபாய்க்கும் அறிமுகமாகி உள்ளது.

”4கே திரையுடன் கூடிய ரேசர் புக் 13 கேமிங் லேப்டாப் அறிமுகம்”

தற்சமயம் அமெரிக்காவில் மட்டும் அதுவும் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் இந்த கேமிங் லேப்டாப்கள், இந்திய சந்தைக்கு எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்த எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.

  • எஸ். முத்துக்குமார்