விண்ணப்பித்த 15 நாளில் ரேஷன் கார்டு : சட்டப்பேரவையில் அறிவிப்பு!

 

விண்ணப்பித்த 15 நாளில் ரேஷன் கார்டு : சட்டப்பேரவையில் அறிவிப்பு!

ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள் அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “கொரோனா மூன்றாவது அலை உருவானால் அதனை சமாளிக்க திரவ ஆக்சிஜன் உற்பத்திக்கு ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்படும். நீட்தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரையை ஏற்று சட்ட முன்வடிவு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை உயர்த்திட வேண்டும்; மத்திய அரசு வழங்கும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். சென்னையில் வெள்ள பாதிப்புகளை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மை குழு அமைக்கப்படும்.

விண்ணப்பித்த 15 நாளில் ரேஷன் கார்டு : சட்டப்பேரவையில் அறிவிப்பு!

உழவர் நலனைப் பேணவும், வேளாண் உற்பத்தியை பெருக்கவும் ,வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். கால்நடை பராமரிப்பு ,இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களை பயிரிடுதல் ஆகியவை ஊக்குவிக்கப்படும். தற்போது தமிழகத்தில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களை விரைவாக மீட்டு எடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள் செலுத்தப்படும் தொழில் வழியை செலுத்துவதற்கான கால அளவு மூன்று மாதம் நீட்டிக்கப்படும். தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதற்கு சொத்து ஆவணங்களை அடமானம் வைக்கும் பத்திரப்பதிவு முத்திரை தீர்வையில் இருந்து டிசம்பர் மாதம் வரை விலக்கு அளிக்கப்படும். தமிழகத்தில் கொரோனா குறைந்தவுடன் உள்ளாட்சி அமைப்பு காண தேர்தல் நடத்தப்படும். அத்துடன் விண்ணப்பிக்கும் அனைவர்க்கும் 15 நாளில் ரேஷன் கார்டு தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.