மசினகுடியில் தென்பட்ட அரிய வகை கழுதை புலி உயிரிழப்பு!

 

மசினகுடியில் தென்பட்ட அரிய வகை கழுதை புலி உயிரிழப்பு!

நீலகிரி

நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் தென்பட்ட அரிய வகை கழுதைப்புலி இன்று மர்மமான முறையில் உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள், யானைகள், கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்த நிலையில், நீலகிரி – ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள சீகூர், தெங்குமரஹாடா வனப் பகுதியில் மட்டும் வாழ்ந்து வரும் ஐனா எனப்படும் அரிய வகை கழுதை புலி, கடந்த மாதம் முதன்முறையாக மசினகுடி வனப் பகுதியில் காணப்பட்டது.

மசினகுடியில் தென்பட்ட அரிய வகை கழுதை புலி உயிரிழப்பு!

பொதுவாக அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டுமே வாழும் இந்த கழுதைப் புலி, பொதுமக்கள் அதிகமுள்ள மசினகுடி பகுதியில் தென்பட்டது வனத்துறையினரிடையே வியப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், மசினகுடி அருகேயுள்ள ஆச்சக்கரை சாலை ஓரத்தில் இன்று ஆண் கழுதை புலி இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று அதனை மீட்ட வனத்துறையினர், முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை மேற்கொண்டர்.

அதில், உயிரிழந்த கழுதை புலிக்கு சுமார் 8 வயது இருக்கும் என்பது தெரியவந்தது. மேலும், அது வாகனம் மோதி உயிரிழந்திருக்கும் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, கழுதை புலியின் சடலத்தை தகனம் செய்த வனத்துறையினர், இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.