“பட்டினி கிடந்து பத்தினியாக வாழ வேண்டுமா ? ” சுரங்க தொழிலில் நூறு ரூபாய்க்கு கற்பை கூறு போடும் கொடுமை..

சுரங்க முதலாளிகளாலும் ,ஒப்பந்தகாரர்களாலும் சுரங்க தொழிலுக்கு போகும் பெண்களும் சிறுமிகளும் பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

உத்தரபிரதேசத்தின் புண்டேல்கண்ட் பிராந்தியத்தில் டெல்லியிருந்து இருந்து சுமார் 700 கி.மீ தொலைவில் சித்ரகூட் உள்ளது. இங்குள்ள சுரங்க தொழிலை பல செல்வந்தர்கள் செய்து வருகிறார்கள்.அங்கு சுரங்க தொழிலுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்க அந்த பகுதியை சேர்ந்த 12 வயது 14 வயதிலிருக்கும் பல பழங்குடி சிறுமிகளை வேலைக்கு அனுப்புகிறார்கள் .

அந்த சிறுமிகளுக்கு வேலை கொடுக்கும் ஒப்பந்தக்கார்களும் ,சுரங்க முதலாளிகளும் 100 ரூபாய்க்கும் ,200 ரூபாய்க்கும் வேலையும் வாங்கிக்கொண்டு ,தொடர்ந்து வேலை கொடுக்க தங்களின் கற்பையும் கொடுக்க வேண்டுமாம் .அப்போதுதான் தொடர்ந்து வேலை கொடுப்பார்களாம் .இல்லையென்றால் வேலை இல்லை என்று அனுப்பி விடுவார்களாம் .பத்தினி என்று பெயரெடுத்த பட்டினியால் சாவதைவிட அவர்களின் காமப்பசிக்கு பல சிறுமிகள் இரையாகிறார்களாம் .

அந்த சிறுமிகள் தங்கள் குடும்ப சூழ்நிலையால் அவர்களின் விருப்பத்துக்கு பணிந்து போகிறார்கள் .கார்வி பகுதியை சேர்ந்த ஒரு பெண் இதுபற்றி கூறும்போது ,”நாங்கள் என்ன செய்வது ,அவர்கள் எங்களை வேலைக்கு எடுக்கும்போதே ,படுக்கைக்கும் சம்மதிக்கும் பெண்களைத்தான் எடுக்கிறார்கள் .மறுக்கும் பெண்களுக்கு வேலையில்லை என்று கூறுகிறார்கள் .எங்களின் வயிற்று பிழைப்புக்காக மானத்தையும் விற்று வாழ்கிறோம் “என்று மிக வேதனையோடு தெரிவிக்கிறார் .

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...