மாமனார் வென்றார்… ரங்கசாமி காலில் விழுந்த நமச்சிவாயம்!

 

மாமனார் வென்றார்… ரங்கசாமி காலில் விழுந்த நமச்சிவாயம்!

புதுச்சேரி காங்கிரஸ் அரசைக் கவிழ்த்ததில் நமச்சிவாயம் தான் மிக முக்கியமான காரணம். அவருக்கு முதல்வர் ஆசை காட்டி பாஜக தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டது. இதுதான் பாஜகவுக்கு பின்னாளில் கொஞ்சம் தலைவலியையும் கொடுத்தது. கொடுக்கப் போகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையின்போது நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள ரங்கசாமி விரும்பவில்லை. அவர் தன்னை தான் வேட்பாளராக முன்மொழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாமனார் வென்றார்… ரங்கசாமி காலில் விழுந்த நமச்சிவாயம்!

தனது முடிவில் தீர்க்கமாக இருந்த ரங்கசாமி கடைசி வரை பாஜகவுடன் கூட்டணியா இல்லையா என்ற முடிவை தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். அதற்குப் பின் டெல்லி மேலிடத்தின் மூலம் பேசி தான் ரங்கசாமியை வழிக்கு வர வைத்தனர் புதுச்சேரி பாஜகவினர். அதன்படி முதல்வர் பதவி ரங்கசாமிக்கு என்றும், துணை முதல்வர் பதவி நமச்சிவாயத்துக்கு என்றும் பேசி முடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது உண்மையா இல்லையா என்பது தேர்தல் முடிவுக்குப் பின் தெரியவரும்.

மாமனார் வென்றார்… ரங்கசாமி காலில் விழுந்த நமச்சிவாயம்!

காங்கிரஸில் இருந்து தற்போது பாஜகவுக்கு தாவியிருப்பதால் வலுவான வெற்றிபெறும் தொகுதி நமச்சிவாயத்துக்கு தேவைப்பட்டது. அதற்கு அவர் குறிவைத்த தொகுதி கடந்த மூன்று வருடங்களாக என்ஆர் காங்கிரஸின் கோட்டையாக இருக்கும் மண்ணாடிப்பட்டு தொகுதி. இத்தொகுதியை விட்டுத்தர நமச்சிவாயம் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தார். கட்சியினரின் பெரும் எதிர்ப்பையும் மீறி இத்தொகுதியை தம்பி மருமகனான நமச்சிவாயத்திற்கு விட்டுத்தர முன்வந்தார் ரங்கசாமி.

மாமனார் வென்றார்… ரங்கசாமி காலில் விழுந்த நமச்சிவாயம்!

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோரிமேடு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கசாமி வீட்டிற்கு நமச்சிவாயம் இன்று சென்றார். அங்கு அவரைச் சந்தித்த நமச்சிவாயம், அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். நமச்சிவாயத்துக்கு சால்வை அணிவித்து ரங்கசாமி ஆசி வழங்கினார். தனது வெற்றிக்கும், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வெற்றிக்கும் ரங்கசாமி தேர்தல் பிரச்சாரம் செய்ய வரும்படியும் நமச்சிவாயம் ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தார்.