காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி விலகி விட்டாரா? ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பதில்

 

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி விலகி விட்டாரா? ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பதில்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த படுதோல்விக்கு பொறுப்பேற்று, கடந்த மே மாதம் ராகுல் காந்தி தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு குழப்பங்கள் நிலவின. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மீண்டும் ராகுல் காந்தி வரவேண்டும் என ஒரு குழுவும், பிரியங்கா காந்தி வர வேண்டும் என ஒரு குழுவும், காந்தி குடும்பமே வேண்டாம் என ஒரு குழுவும் அந்த கட்சிக்குள் குரல்கள் எழுந்தன. இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இதனையடுத்து அப்போதைக்கு காங்கிரஸ் தலைவர் பதவி விவகாரம் அடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி விலகி விட்டாரா? ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பதில்

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை கூட உள்ள நிலையில், சோனியா காந்தி இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலுக்கு அக்கட்சி நிர்வாகிகள் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் இடைக்கால தலைவர் பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது” என தெரிவித்துள்ளார்.