வேளாண் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

 

வேளாண் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா மீதான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் ஆகியவை மசோதாக்களை நிறைவேற்றியது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதாவிற்கு தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வேளாண் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
வேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம்

இந்நிலையில் மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து வேளாண் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து வேளாண் மசோதாக்களை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு. குடியரசுத்தலைவரின் ஒப்புதலை அடுத்து வேளாண் மசோதா சட்டமாகியுள்ளது.