ஜே.இ.இ. நுழைவு தேர்வு விவகாரம்… சுப்பிரமணியன் சுவாமிக்கு பதிலடி கொடுத்த மத்திய கல்வி அமைச்சர்…

ஜே.இ.இ. நுழைவு தேர்வு விவகாரம்… சுப்பிரமணியன் சுவாமிக்கு பதிலடி கொடுத்த மத்திய கல்வி அமைச்சர்…

ஜே.இ.இ. தேர்வு தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலடி கொடுத்துள்ளார்.

பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியிடமும் அது தொடர்பாக கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது முயற்சி எந்தவித பலனும் அளிக்கவில்லை. மத்திய அரசு திட்டமிட்டப்படி, ஜே.இ.இ. தேர்வை நடத்தியது. இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி டிவிட்டரில், அனுமதி சீட்டை டவுன்லோடு செய்த 18 லட்சம் பேர்களில் 8 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். வித்யா மற்றம் கயானை புகழ்ந்து பேசும் தேசத்திற்கு என்ன அவமானம் என பதிவு செய்து இருந்தார்.

ஜே.இ.இ. நுழைவு தேர்வு விவகாரம்… சுப்பிரமணியன் சுவாமிக்கு பதிலடி கொடுத்த மத்திய கல்வி அமைச்சர்…
ரமேஷ் பொக்ரியால்

இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி ஜி, ஜே.இ.இ. தேர்வு தொடர்பாக சில உண்மைகளை முன் வைக்க விரும்புகிறேன். ஜே.இ.இ. நுழைவு தேர்வு விண்ணப்பம் செய்தவர்கள் எண்ணிக்கை 8.58 லட்சம், நீங்கள் டிவிட் செய்த 18 லட்சம் அல்ல. இதில் 6.35 லட்சம் பேர் தேர்வுக்கு ஆஜரானார்கள், மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் உறுதிப்படுத்தின.

ஜே.இ.இ. நுழைவு தேர்வு விவகாரம்… சுப்பிரமணியன் சுவாமிக்கு பதிலடி கொடுத்த மத்திய கல்வி அமைச்சர்…
ஜே.இ.இ., நீட் தேர்வுகள்

ஜே.இ.இ.தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை நடைபெறுகிறது. முந்தையது இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்றது. செப்டம்பரில் தேர்வுக்கு வராத பல மாணவர்கள் ஜனவரி தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றிருக்கலாம். எனவே இந்த முறை தேர்வு எழுத வேண்டிய அவசியத்தை உணரவில்லை. அந்த எண்களை நாங்கள் உறுதி செய்கிறோம். இவ்வாறு அவர் பதில் பதிவு செய்துள்ளார்.