மாதம் ரூ.100 கோடி விவகாரம்… மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.. ராம்தாஸ் அதவாலே

மாதம் ரூ.100 கோடி விவகாரம்… மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.. ராம்தாஸ் அதவாலே

மும்பை முன்னாள் காவல்துறை ஆணையரின் குற்றச்சாட்டை குறிப்பிட்டு, மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார்.

மும்பையின் முன்னாள் காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் நேற்று முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில், மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சச்சின் வாசேவிடம் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி வசூல் செய்து தன்னிடம் (தேஷ்முக்) கொடுக்கும்படி கூறினார் என்று அதில் குறிப்பி்ட்டு இருந்தார். அதேசமயம் பரம் பீர் சிங்கின் குற்றச்சாட்டை மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மறுத்துள்ளார்.

மாதம் ரூ.100 கோடி விவகாரம்… மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.. ராம்தாஸ் அதவாலே
பரம் பீர் சிங்

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இது தொடர்பாக கூறியதாவது: பரம் பீர் சிங் கூறியது பொய்யானவை. என்னையும், மகா விகாஸ் அகாடி அராசங்கத்தையும் தற்காப்புக்காக இழிவுப்படுத்த அவர் மேற்கொண்ட சதி இது. அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடருவேன். சச்சின் வாசே கைது செய்யப்பட்ட பின், எத்தனை நாட்கள் ஏன் அமைதியாக இருந்தார்? அவர் ஏன் அந்த நேரத்தில் வாய் திறக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாதம் ரூ.100 கோடி விவகாரம்… மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.. ராம்தாஸ் அதவாலே
அனில் தேஷமுக்

இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார். இது தொடர்பாக ராம்தாஸ் அதவாலே கூறுகையில், பரம் பீர் சிங் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அனில் தேஷ்முக் அந்த பதவியில் தொடர்ந்து நீடிக்க எந்த உரிமையும் இல்லை என்று நினைக்கிறேன். தேஷ்முக், சச்சின் வாசே இடையிலான உறவு வெளிச்சத்துக்கு வந்து விட்டது. தற்போது முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பதவியில் இருக்க உரிமை இல்லை. மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கோரி மத்திய உள்துறை அமைச்சருக்கு நாளை (திங்கட்கிழமை) கடிதம் எழுத உள்ளேன் என தெரிவித்தார்.