கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் பா.ஜ.க.வில் சேர வேண்டும்… பா.ஜ.க.வுக்கு ஆள் பிடிக்கும் ராம்தாஸ் அத்வாலே

கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் பா.ஜ.க.வில் சேர வேண்டும்… பா.ஜ.க.வுக்கு ஆள் பிடிக்கும் ராம்தாஸ் அத்வாலே

காங்கிரஸ் தலைவர்கள் கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் அந்த கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் பதவி தொடர்பாக சர்ச்சை நிலவுகிறது. பா.ஜ.க. சார்பாக சிபல் மற்றும் ஆசாத்தை ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆகையால் சிபல் மற்றும் ஆசாத் காங்கிரசிலிருந்து விலகுமாறு நான் பரிந்துரைக்கிறேன் வேண்டும். காங்கிரஸை வளர்க்க அவர்கள் பல ஆண்டுகள் செலவிட்டனர், ஆனாலும் அவர்கள் அந்த கட்சியிலிருந்து விலகி இப்போது பா.ஜ.க.வில் சேர வேண்டும்.

கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் பா.ஜ.க.வில் சேர வேண்டும்… பா.ஜ.க.வுக்கு ஆள் பிடிக்கும் ராம்தாஸ் அத்வாலே
கபில் சிபல்

அங்கு அவர்கள் அவமதிக்கப்படுகிறார்களானால், அவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா செய்தது போல் அந்த கட்சியிலிருந்து வெளியேற வேண்டும். சச்சின் பைலட் கூட அதனை செய்தார் ஆனால் சமரசத்தை அடைந்தார். காங்கிரஸை உருவாக்கியவர்களை குற்றம் சாட்டி ராகுல் காந்தி தவறு செய்கிறார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பல ஆண்டுகள் இருக்கும்.

கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் பா.ஜ.க.வில் சேர வேண்டும்… பா.ஜ.க.வுக்கு ஆள் பிடிக்கும் ராம்தாஸ் அத்வாலே
குலாம் நபி ஆசாத்

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். பா.ஜ.க. வெகுஜன கட்சி, அனைத்து சாதி, பிரிவு மற்றும் மதங்களை சேர்ந்த மக்களும் பா.ஜ.க.வில் இணைகின்றனர். வரும் தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றியை தக்கவைத்து கொள்ளும், காங்கிரஸை நிர்மூலமாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் தேவை என்பதை வலியுறுத்தி கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்பட அந்த கட்சியை சேர்ந்த 23 தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இது ராகுல் காந்திக்கு கோபத்தை கிளறியது. கட்சியின் மூத்த தலைவர்கள் பா.ஜ.க. சார்பாக செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.