கடலில் மூழ்கிய இரும்பு மிதவையை மீட்கும் பணி தீவிரம்

 

கடலில் மூழ்கிய இரும்பு மிதவையை மீட்கும் பணி தீவிரம்

ராமநாதபுரம்

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் மோதிய இரும்பு மிதவையை, விசைப்படகுகள் உதவியுடன் மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலம் நூறு ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் அருகிலேயே 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

கடலில் மூழ்கிய இரும்பு மிதவையை மீட்கும் பணி தீவிரம்

இந்த நிலையில் பலத்த சூறைக்காற்று காரணமாக கடந்த 9ஆம் தேதி இரும்பு மிதவையில் பொருத்தப்பட்டிருந்த கிரேன் பாம்பன் பாலத்தின் 120 மற்றும் 121-வது தூண்களுக்கு இடையே மோதி, இரும்பு கர்டரில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து அந்த இரும்பு மிதவையை கட்டுமான ஊழியர்கள் கடலில் மூழ்கடித்தனர்.

கடலில் மூழ்கிய இரும்பு மிதவையை மீட்கும் பணி தீவிரம்

இந்நிலையில், பாலத்தின் அடியில் உள்ள அந்த மிதவையை மீட்கும் முயற்சியில் ரயில்வே மற்றும் கட்டுமான நிறுவன ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன்படி நேற்று 4 விசைப்படகுகள் உதவியுடன், நீண்ட தூரத்திற்கு கையிறு கட்டி மிதவையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மாலை வரை நீடித்த இந்த பணி இரவாகியதால் நிறுத்தப்பட்டது.