சாத்தான்குளம் டிஎஸ்பியாக ராமநாதன் நியமனம்!

சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளராக ராமநாதனை நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் அடைந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் நடைபெற்றுவரும் சூழலில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையில் பல்வேறு உண்மைகளும், திடுக்கிடும் தகவல்களும் வெளிவந்தன.

இந்நிலையில் சாத்தான்குளம் டிஎஸ்பியாக ராமநாதனை நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஏடிஎஸ்பி பார்த்திபன், புதுக்கோட்டை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் ஏடிஎஸ்பி குமார் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.எஸ்.பியாக கோபி நியமிக்கப்பட்டுள்ளார்.

Most Popular

ஆவினில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அதிரடி பறக்கும் படை அமைக்க வேண்டும் : பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

ஆவினில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அதிரடி பறக்கும் படை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு மின்னஞ்சல் வாயிலாக பால் முகவர்கள் சங்கம்...

கொத்தவால்சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்...

அந்தமானில் திடீர் நிலநடுக்கம்!- அலறியடித்து ஓடிய மக்கள்

அந்தமானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டை விட்டு மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் ஒன்றான டிகிலிபூரில் இன்று அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம்...

உங்கள் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கப்போறீங்களா… இந்த 8 விஷயங்களைச் செக் பண்ணுங்க!.

கொரொனா நோய்த் தொற்று உலகம் முழுவதுமே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அதனால், பள்ளிகள், கல்லூரிகள் எதுவும் இயங்கவில்லை. தேர்வுகளைக்கூட ரத்து செய்துவிட்டார்கள். ஆனாலும், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டார்கள். பெற்றோர்களும் பிள்ளைகளைப் பள்ளியில்...
Open

ttn

Close