“ஸ்டாலின் துணை முதல்வராக நான் தான் காரணம்” – ராமதாஸ் பகீர்

 

“ஸ்டாலின் துணை முதல்வராக நான் தான் காரணம்” – ராமதாஸ் பகீர்

தமிழக தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் விவாத மேடையாக களம் மாறியிருக்கிறது. ஒவ்வொருவரும் மாறி மாறி குற்றச்சாட்டு மழைகளைப் பொழிந்துவருகின்றனர். ஸ்டாலின், எடப்பாடி ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். தற்போது பாமக தலைவர் ராமதாஸும் களத்தில் இறங்கியிருக்கிறார். இதனால் பிரச்சார களம் களைகட்ட ஆரம்பித்திருக்கிறது.

First enemy' and then friend: Ramadoss - Frontline

நெய்வேலி பாமக வேட்பாளர் கோ. ஜெகனை ஆதரித்து சத்திரம், முத்தாண்டிக்குப்பம் ஆகிய இடங்களில் நேற்று இரவு ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கருணாநிதி எப்போதும் எனது யோசனைகளைக் கேட்பார். ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுக்க கருணாநிதியிடம் சொன்னதே நான் தான். மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது, தமிழகத்திற்கு இருண்ட காலமாக அமைந்து விடும்.

“ஸ்டாலின் துணை முதல்வராக நான் தான் காரணம்” – ராமதாஸ் பகீர்


ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது தான் தஞ்சை தரணியை பாலைவனம் ஆக்கினார். இன்று முதல்வர் பழனிசாமி அதனைப் பாதுகாக்கப்பட்ட டெல்டா மண்டலமாக உருவாக்கி, விவசாயிகளின் வாழ்வில் ஏற்றத்தை உருவாக்கியுள்ளார். எங்கள் கூட்டணியில் உள்ள அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமுதசுரபி போன்றது. அள்ள அள்ள குறையாத பல திட்டங்களை அந்த தேர்தல் அறிக்கை கொண்டுள்ளது. அனைவரும் அதிமுக-பாமக கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என்றார்.