தமிழகத்தில் நாளை மறுநாள் ரமலான் கொண்டாடப்படும் – தலைமை காஜி

 

தமிழகத்தில் நாளை மறுநாள் ரமலான் கொண்டாடப்படும் – தலைமை காஜி

கொரோனாவால் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வழிபாட்டுத் தலங்களில் வழிபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிறை இன்று தென்படாததால் ரமலான் வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் எனவும், கொரோனா பரவலால் இஸ்லாமியர்கள் மசூதிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் நாளை மறுநாள் ரமலான் கொண்டாடப்படும் – தலைமை காஜி

இதுகுறித்து தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரமலான் மாதம் 29 ஆம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 12.5.2021 ஆம் தேதி அன்று மாலை ஷவ்வால் மாத பிற சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 14.5.2021 ஆம் தேதி அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் பித்ர் வெள்ளிக்கிழமை 14.5.2021 ஆம் தேதியன்று கொண்டாடப்படும்” என தெரிவித்தார்.