உத்தவ் தாக்கரே அயோத்தி வருவதை யாராலும் தடுக்க முடியாது… ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர்

உத்தவ் தாக்கரே அயோத்தி வருவதை யாராலும் தடுக்க முடியாது… ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர்

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அயோத்தி வருவதை யாராலும் தடுக்க முடியாது என ராமர் கோயில் தீர்த்த கேஷத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கும், சிவ சேனா மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசுக்கும் இடையே கடந்த சில தினங்களாக கடும் வார்த்தை போர் நிலவி வந்தது. மேலும் கங்கனாவின் அலுவலகத்தை மும்பை மாநகராட்சி இடித்தது. இந்த விவகாரத்தில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு அகாரா பரிஷத், விஷ்வ இந்து பரிஷித் மற்றும் பல அயோத்தி சீர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

உத்தவ் தாக்கரே அயோத்தி வருவதை யாராலும் தடுக்க முடியாது… ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர்
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

மேலும், சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்தியில் வரவேற்கபட மாட்டார் என அவர்கள் அறிவித்தனர். இந்து மத தலைவர்களே உத்தவ் தாக்கரேவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிவ சேனாக கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தது. இந்த சூழ்நிலையில் ராமர் கோயில் தீர்த்த கேஷத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே அயோத்தி வருவதை யாராலும் தடுக்க முடியாது… ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர்
சம்பரத் ராய்

சம்பத் ராய் இது தொடர்பாக கூறுகையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அயோத்தி வருவதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார். அதேசமயம் ஹனுமான் கார்ஹி கோயில் குரு மஹந்த் ராஜு தாஸ் கூறுகையில், மகாராஷ்டிரா அரசு நடிகைக்கு எதிராக எந்த நேரத்தையும் வீணாக்காமல் செயல்பட்டது. ஆனால் அதே அரசாங்கம் பால்கரில் இரண்டு துறவிகளை கொன்றவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.