சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக ராமர் கோவில் திகழும்! – குடியரசுத் தலைவர் ட்வீட்

சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக ராமர் கோவில் திகழும்! – குடியரசுத் தலைவர் ட்வீட்

இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக ராமர் கோவில் திகழும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பு அனுப்பப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக ராமர் கோவில் திகழும்! – குடியரசுத் தலைவர் ட்வீட்

இந்த நிலையில், தொடக்க விழா பற்றி ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

http://

அதில், “அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். சட்டத்துக்கு உட்பட்டு இது கட்டமைக்கப்பட்டுள்ளதால், இது நாட்டின் சமூக நல்லிணக்க உணர்வையும், வைராக்கியத்தையும் வரையறுக்கிறது. இது ராமராஜ்யம் என்ற கொள்கைகளுக்கு சான்றாகவும் நவீன இந்தியாவின் அடையாளமாகவும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர்கள், அமைச்சர்கள் தங்கள் வீடுகளில்

சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக ராமர் கோவில் திகழும்! – குடியரசுத் தலைவர் ட்வீட்

இருந்தபடி விழாவைப் பார்த்து, வீட்டில் சிறப்பு வழிபாடு செய்தது தொடர்பான படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் குடியரசு தலைவரை விழாவுக்கு அழைக்காதது தங்களை அவமானப்படுத்துவதாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பலரும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.