பா.ஜ.க. நாட்டை விற்று விட்டது என்று மக்களிடம் நாங்கள் கூறுவோம்… ராகேஷ் டிக்கைட்

 

பா.ஜ.க. நாட்டை விற்று விட்டது என்று மக்களிடம் நாங்கள் கூறுவோம்… ராகேஷ் டிக்கைட்

உத்தர பிரதேச மக்களிடம் பா.ஜ.க. நாட்டை விற்று விட்டது என்று நாங்கள் கூறுவோம் என்று ராகேஷ் டிக்கைட் தெரவித்தார்.

பாரதிய கிஷான் சங்கததின் தலைவர் ராகேஷ் டிக்கைட் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பா.ஜ.க. தலைவர்கள் ஒருபோதும் நேரடியான முறையில் பேச மாட்டார்கள். யாருக்கும் செவிசாய்க்காமல் தங்களை பற்றி தொடர்ந்து பேசுவதற்கு அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸால் பயிற்சி அளிக்கப்படுகிறது. வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் பேச்சு மட்டுமே தீர்வுக்கான வழி என்பதால் பேச்சுவார்த்தை நடத்த விரும்பும்போது மத்திய அரசு எங்களிடம் சொல்ல வேண்டும்.

பா.ஜ.க. நாட்டை விற்று விட்டது என்று மக்களிடம் நாங்கள் கூறுவோம்… ராகேஷ் டிக்கைட்
ராகேஷ் டிக்கைட்

சுதந்திரம் பெற நாம் சுமார் 90 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. விவசாயிகள் போராட்டம் தொடங்கி ஏழு மாதங்கள்தான் ஆகின்றது. தேர்தல் குறித்து உத்தர பிரதேச மக்கள் எங்களிடம் ஆலோசனை கேட்டால், பா.ஜ.க. நாட்டை விற்று விட்டது என்று அவர்களிடம் நாங்கள் கூறுவோம். உத்தர பிரதேசத்தில் மின்சார கட்டணம் மிக அதிகமாக உள்ளது மற்றும் கரும்பு விலை குறித்து பேசுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க. நாட்டை விற்று விட்டது என்று மக்களிடம் நாங்கள் கூறுவோம்… ராகேஷ் டிக்கைட்
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக டெல்லியின் பல எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும்வரை போராட்டத்தை நடத்துவோம் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். அதேசமயம், வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய தயார் ஆனால் அவற்றை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதனால் விவசாயிகளின் போராட்டம் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே செல்கிறது.